மேலும் செய்திகள்
பஞ்சாமிர்தம், அன்னதானம் தரம் குறித்து பரிசோதனை
22-Sep-2024
பழநி:பழநி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறு தகவல் பரப்பியதாக பா.ஜ., நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இக்கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிக்க வழங்கப்படும் நெய் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்து பெறப்படுகிறது . பஞ்சாமிர்தம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.இந்நிலையில் பா.ஜ., தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் செல்வகுமார் , பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறு தகவல் பரப்பியதாக அடிவாரம் போலீசில் பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22-Sep-2024