உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டாஸ்மாக்கிற்கு                        எதிராக வழக்கு

டாஸ்மாக்கிற்கு                        எதிராக வழக்கு

குஜிலியம்பாறை, ;குஜிலியம்பாறை அருகே பாலுநாயுடுபுரம் பொன்ராம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கோட்டநத்தம் ஊராட்சிக்குட்பட்டது சேர்வைக்காரன்பட்டி. அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். கடையை ஊருக்கு வெளியே அதிகாரிகள் மாற்றினர். அதை மீண்டும் விதிகளை மீறி அரசு பள்ளி, கோயில் அருகே இடமாற்றம் செய்ய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. முடிவை கைவிட வலியுறுத்தி கலெக்டர், மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு மனு அனுப்பினோம். கடையை இடமாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை