மேலும் செய்திகள்
போலி டாக்டர் மீது வழக்கு
07-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி திண்டுக்கல் வடக்கு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் ஹோமியோபதி டாக்டரான திண்டுக்கல் ரவுண்ட் ரோடு செந்தில்தாசன் சாணார்பட்டி அடுத்த வீரசின்னம்பட்டி வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவர் சிகிச்சைக்காக யாரும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம். தடுப்பூசி செலுத்த வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு அவதுாறு பரப்பி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் வி.ஏ.ஓ., செந்தில்தாசன் மீது போலீசார் இணையவழி குற்றத்தடுப்பு சட்டப் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
07-Oct-2026