உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தந்தையை அடித்து வீட்டுக்குள் பூட்டிய மகன், பேரன் மீது வழக்கு

தந்தையை அடித்து வீட்டுக்குள் பூட்டிய மகன், பேரன் மீது வழக்கு

குஜிலியம்பாறை: ஆலம்பாடி சின்னப்பனுாரை சேர்ந்தவர் விவசாயி கருப்பக்கோனார் 75. இவரது மனைவி காளியம்மாள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் இவரது 3 மகன்கள், ஒரு மகள் தனியாக வசித்து வருகின்றனர். கருப்பக்கோனார் மட்டும் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்.திருச்சி மாவட்டம் தென்னுார் பாரதி நகரில் வசித்து வரும் கருப்பக்கோனார் மகன் பழனியப்பன், பேரன் திருவெங்கடசாமி இருவரும் கருப்பக்கோனார் வசிக்கும் வீட்டிற்கு சென்றனர். சொத்தை பிரித்துக் கொடுக்காமல் நீயே வைத்துக் கொள்ளலாமா என கூறி அடித்து உதைத்து வீட்டுக்குள் வைத்து பூட்டினர். மோட்டார், பைப் லைன், மோட்டார் ரூமை அடித்து உடைத்தனர். மற்றொரு மகன் பெருமாள் கருப்பகோனாரை மீட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !