உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உஷார் ...: மழைக்காலம் துவங்குவதால் டெங்கு,ஆஸ்துமாக்கு வாய்ப்பு

உஷார் ...: மழைக்காலம் துவங்குவதால் டெங்கு,ஆஸ்துமாக்கு வாய்ப்பு

கோடைக்காலம் முடிந்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் வாட்டிவருகிறது. கண்மாய், குளம், ஏரிகளில் இயல்பைக்காட்டிலும் தண்ணீர் அளவு குறைந்துவிட்டது. நகர்ப்புறங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும், கிராமப்புறங்களுக்கு நன்னீர் ஊற்றுகள் உறைத்திட்ட கிணறுகள் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீர்நிலைகளில் குறைந்துவிட்ட தண்ணீர் அளவு காரணமாக குடிநீர் வினியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நகர்புறங்களில் 4 நாட்களுக்கு ஒருமுறை , கிராமப்புறங்களில் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு வினியோகிக்கப்படும் தண்ணீரும் கூட குறைந்த நேரமே வருவதால் வீடுகளில் குடங்கள், டிரம்கள், தொட்டிகள் என கிடைக்கும் பெரிய பாத்திரங்களில் தண்ணீரைப்பிடித்து பொதுமக்கள் தேக்கி வைக்கின்றனர்.ஏற்கெனவே நகராட்சி, ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் கிடைக்கும் நீரை கொதிக்கவைத்து பருகுவது அவசியம். ஆனால் தண்ணீர் பயன்பாடு அதிகம் தேவைப்படாத இடத்தில் சேமித்து வைக்கப்படும் நீரை கொதிக்க வைக்காமல் பருகுவதால் பல்வேறு நோய் தொற்றுக்கு மக்கள் ஆளாகின்றனர்.பலநாள் கணக்கில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் தேக்கப்படும் நீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சுப்பொரிக்கின்றன. இதுபோல் வீடுகளில் தொட்டிகள், குடங்களில் தேக்கப்படும் நீரும் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. சமீபக்காலமாக காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நன்னீர் கொசு உற்பத்தி மூலம் பரவும் நோய் தாக்க்கத்திலிருந்து மக்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியம். பொதுவாக மழைக்காலம் துவங்கும்போது காய்ச்சல், ஆஸ்துமா பிரச்னைகள் அதிகம் வரும். தற்போது அதிகரித்துவரும் காய்ச்சல் பாதிப்பு டெங்கு காய்ச்சல், புளூயன்சா போன்ற அதிதீவிர தன்மைக்கு மாறாமல் இருப்பதற்கு விழிப்புணர்வு அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V RAMASWAMY
ஜூலை 11, 2025 15:14

முதலில் தூங்கும் நகராட்சிகளை முடுக்கிவிட்டு குறிப்பாக லஞ்ச லாவண்யம் சோம்பேறித்தனம்இல்லாமல் சுகாதாரம் சுத்தம் இவற்றிற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லுங்கள், சாக்கடைகள் கழிவு நீர் தொட்டிகள், இவற்றை அடிக்கடி சுத்தம் செய்து எங்கும் கொசுக்கள் பூச்சிகள் தங்கி இனப்பெருக்கம் செய்யும் அழுக்குகள் நீர் நிலைகள் இவைகள் இல்லாமல் கொசு விரட்டி மருந்துகள் தெளித்து மக்கள் நோய் நொடியில்லா வாழ்வு பெற நடவடிக்கைகள் எடுங்கள். அறிக்கைகளும் அறிவுரைகளும் மட்டும் போதாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை