மேலும் செய்திகள்
துணை ஜனாதிபதி வருகைக்காக தயாராகும் 'ஹெலிபேட்'
28-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் இன்று (அக்.,30) மதியம் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக கலெக்டர் துர்கா, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹெலிபேட் தள ஒத்திகையும் நடந்தது. பல்கலையில் மத்திய சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, தமிழக போலீஸ் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவம், அவசர தேவைகளுக்கு டாக்டர்கள் குழு, மருத்துவமனை அறை தயார்படுத்தும் பொருட்டு மத்திய பாதுகாப்பு படையினர் இன்று (அக்.,29) திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். மருத்துவமனை நுழைவு வாயில், அவசர வழி, மருத்துவ வசதிகள், சிறப்பு நிபுணத்துவ டாக்டர்கள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர்.
28-Oct-2026