உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொண்டு நிறுவன மோசடி: புகார் செய்ய அழைப்பு

தொண்டு நிறுவன மோசடி: புகார் செய்ய அழைப்பு

திண்டுக்கல்: பழநி ஸ்ரீநேசா தொண்டு நிறுவனம் மோசடி தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.கோயம்புத்துாரை சேர்ந்த செந்தில்குமார் பழநியில் ஸ்ரீநேசா பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தினார். இவரது மனைவி ஜெயந்தி, மைத்துனர் சக்திவேல் பங்குதாரர்களாக இருந்தனர்.வைப்புத்தொகை செலுத்தினால் 2.5 சதவீதம் வட்டி தருவதோடு, 2 கிராம் தங்க நாணயம் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.இதைநம்பி சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்ட ஏஜென்ட்கள் மூலம் ரூ. பலகோடி வைப்புத்தொகை பெற்றனர். இதனிடையே நிறுவனத்தை மூடிவிட்டு மூவரும் தலைமறைவாகினர். திண்டுக்கல் சவுராஷ்டிராபுரத்தை சேர்ந்த மதன்பிரசாத் 34, புகாரில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கணவன்,மனைவியை கைது செய்து சக்திவேலை தேடி வருகின்றனர்.இதை தொடர்ந்து பணத்தை இழந்தவர்கள் கொடுத்த புகாரின்படி மோசடி ரூ.30கோடியாக உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்கள், அசல் ஆவணங்களுடன் ,கதவு எண் 59, நேருஜி நகர், பூங்கா எதிரில் உள்ள திண்டுக்கல் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என போலீசார் கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி