மேலும் செய்திகள்
விலை உயர்ந்த சுரைக்காய்
23-Dec-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.15க்கு விற்றதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் வெண்டைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கடந்த வாரம் தொடர் மழை காரணமாக வரத்து குறைவாக இருந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் கிலோ ரூ.32க்கு மேல் விற்பனையானது. இந்நிலையில் இந்த வாரம் மழை இல்லாததால் அறுவடை அதிகரித்து மார்க்கெட்டுக்கு வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக விலை பாதியாக குறைந்து கிலோ ரூ.15க்கு விற்றதால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
23-Dec-2024