குடகனாற்றின் குறுக்கே ரூ.8.75 கோடியில் தடுப்பணை
வேடசந்துார்: வேடசந்துார் குடகனாற்றின் குறுக்கே ரூ.8.75 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி பூமி துவங்கியது. தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை நிரம்பினால் அழகாபுரி, வள்ளிபட்டி, கூம்பூர் வழியாக செல்லும் தண்ணீர் கரூர் காவிரி ஆற்றில் கலக்குகிறது. இதை தொடர்ந்து சுற்றுப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி பாலப்பட்டி ஊராட்சி மோலக்கவுண்டனுார் மேற்குப் பகுதியில் குடகனாற்றின் குறுக்கே ரூ.8.75 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி துவங்கியது. இதற்கான பூமி பூஜையில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., காந்திராஜன் முன்னிலை வகித்தார். நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் பாலமுருகன் வரவேற்றார். உதவி செயற்பொறியாளர் தனசேகர், உதவி பொறியாளர்கள் முருகன், அருண், தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.