உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செடிப்பட்டி காளியம்மன் கோயில் விழா

செடிப்பட்டி காளியம்மன் கோயில் விழா

கோபால்பட்டி : கோபால்பட்டி அருகே செடிப்பட்டி காளியம்மன் கோயில் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இவ்விழாவையொட்டி மே 30 சுவாமி சாட்டுதல் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ,அபிஷேக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அம்மன் கரகம் அலங்காரம் செய்யப்பட்டு மேளதாளம் முழங்க கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி, பால்குடம் , பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை