உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வெந்நீர் கொட்டியதில் குழந்தை பலி

வெந்நீர் கொட்டியதில் குழந்தை பலி

நத்தம் : மதுரை மாவட்டம், அலங்காநல்லுார் அருகே சால்வார்பட்டியைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி பொன்னம்மாள். அக்., 10ல், பொன்னம்மாள் தன் ஒரு வயது குழந்தை அனன்யாவுடன், நத்தம் - பரளி தேத்தாம்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றார். வீட்டின் அருகே விறகு அடுப்பு வைத்து சமைத்துக் கொண்டிருந்தனர்.எதிர்பாராத விதமாக அனன்யா மீது வெந்நீர் கொட்டியது. இதில், காயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனன்யா நேற்று இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ