உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிமகன்கள் குத்தாட்டம் பெண்கள் முகம் சுளிப்பு

குடிமகன்கள் குத்தாட்டம் பெண்கள் முகம் சுளிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் பூம்பாறையில் குடிமகன்கள் ரோட்டோரம் குத்தாட்டத்தில் ஈடுபடுவதால் பெண்கள் முகம் சுளிக்கின்றனர். பூம்பாறை பழம்புத்துார் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இவ்வழியே பழம்புத்துார், குண்டுபட்டி, சத்யா நகர், புதுப்புத்துார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் முக்கிய ரோடாகவும், இதை சுற்றி நுாற்றுக்கணக்கான விளை நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. நாள்தோறும் இப்பகுதிக்கு வருகை தரும் குடிமகன்கள் மது குடித்து குத்தாட்டாத்தில் ஈடுபடுவது, அரை நிர்வாணம், ஒருமையில் பேசுவது என தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஒட்டிகள் ,தோட்டப் பணிகளுக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் முகம் சுளிப்புக்கு ஆளாகின்றனர். குடிமகன்களின் இத்தகைய செயல் குறித்து கேள்வி கேட்போரிடம் வாக்குவாதம் கைகலப்பு ஏற்படுகிறது. புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை இல்லை. நாள்தோறும் நிகழும் இத்தகைய ஒழுங்கீனத்தை தவிர்க்க டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !