உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மையே சேவை விழிப்புணர்வு

துாய்மையே சேவை விழிப்புணர்வு

திண்டுக்கல், : காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2- ல் துாய்மை திருநாளாக கொண்டாடும் வகையில் துாய்மையே சேவை இயக்கம் 15 நாட்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று மாநகராட்சி கமிஷ்னர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு துய்மையே சேவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாநகர் நல அலுவலர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம், ரஞ்சித், ஸ்டீபன் கலந்து கொண்டனர். வாசகி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை