திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்வடிப்பகுதி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாணார்ப்பட்டியடுத்த கம்பிளியம்பட்டி நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு பணிகள்,இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கால்நடை தீவனப்புல் வெட்டும் கருவியின் பயன்பாடுகள் குறித்தும் கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது,உலர்களங்கள், குளம் துார்வாரும் பணிகள்,தையல் பயிற்சி, ஆயத்த ஆடைகள் தயாரித்தல், பால் உற்பத்தி, அமைத்து சுயதொழில் ஊக்குவித்தல் என மொத்தம் ரூ.31.37 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதன் மூலம் 7683 விவசாயிகள் நேரடியாக பயனடைந்துள்ளனர் என்றார். மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் வேளாண்மை துணை இயக்குநர் உமா, உதவிப்பொறியாளர் சகாயராஜ், நீர்வடிப்பகுதி வளர்ச்சி அணி உறுப்பினர்கள் செந்தில்வேல், சௌந்திரராஜன், ராஜகுரு, ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.