உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு

ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே பச்சளநாயக்கன்பட்டி பள்ளியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறன், வாசிப்பு திறன், திருப்புதல் பயிற்சி ஆகியவற்றை பரிசோதித்தார். காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தார். சமையல் கூடம், பள்ளி வளாகத்தில் உள்ள குப்பை அகற்றும் முறை, குடிநீர் வசதி, வகுப்பறைகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ