மேலும் செய்திகள்
கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகள் விறுவிறு
12-Sep-2025
பழநி: பழநி பாலசமுத்திரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடத்தை கலெக்டர் கண்ணன் ஆய்வு செய்தார். குரும்பபட்டி ரேஷன் கடையில் இருப்புப் பொருள்கள்,சின்னக்கலையம்புத்துார் பகுதியில் கட்டப்பட்டு வரும் வேளாண்மை விற்பனை சேமிப்பு கட்டட பணிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணி,விஜயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டட பணிகளை ஆய்வு செய்தார். மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கர்ப்பிணி பெண்களின் விவரங்கள் ,தாய்மார்கள் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். தாசில்தார் பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, நளினா, மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா உடன் இருந்தனர்.
12-Sep-2025