உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊராட்சி தலைவர், செயலாளர் மீது கலெக்டரிடம் புகார்

ஊராட்சி தலைவர், செயலாளர் மீது கலெக்டரிடம் புகார்

வத்தலக்குண்டு: விராலிப்பட்டி ஊராட்சி தலைவர், செயலாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.விராலிப்பட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருக்கு 2000ல் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மூன்று சென்ட் காலி மனை பட்டா வழங்கப்பட்டது. இவர் குடும்பத்துடன் வெளியூரில் இருந்த போது அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் குடும்பத்தினர் போலி பட்டா தயார் செய்து ஊராட்சி தலைவர், செயலாளரிடம் வீட்டு வரி ரசீது பெற்றனர். மின் இணைப்பு பெற்று கட்டடம் கட்ட துவங்கினர். செல்லத்துரை குடும்பத்தினர் காலி மனை பட்டா ஆவணங்களை ஊராட்சி நிர்வாகத்திடம் காண்பித்தும் ரசீதை ரத்து செய்யவில்லை. விசாரணையில் தர்மராஜ் தரப்பினருக்கு வழங்கப்பட்ட ரசீது போலியானது என தெரிய வர விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையிலும் உண்மைக்கு புறம்பான தகவலை கூறியதால் தர்மராஜ் போலி பட்டா ரத்தாக வில்லை. இதை தொடர்ந்து செல்லத்துரை கலெக்டரிடம் கொடுத்த மேல்முறையீட்டு மனுவில் போலி ரசீது வழங்கிய ஊராட்சி தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலாளர் கண்ணன், மின் இணைப்பு வழங்கிய மின்துறை, பட்டா வழங்கிய வருவாய் துறை மீது நடவடிக்கை எடுத்து போலி ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என கூறி உள்ளார். இருந்தும் ஆறு மாதங்களாக எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் பட்டா இருந்தும் இடத்தை கைப்பற்ற முடியாமல் போல் செல்லதுரை குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து இவர்கள் ஊராட்சி தலைவர், செயலாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ