உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருப்புக் கொடி ஏந்தி காங்., ஆர்ப்பாட்டம்

கருப்புக் கொடி ஏந்தி காங்., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், எம்.பி., பிரியங்கா தலைமையில் எதிர்கட்சி எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் உள்ளிட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச்சென்று கைது செய்தனர். இதனை கண்டித்து திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்தும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் வேங்கைராஜா, மாநகர மாவட்ட துணைத்தலைவர் முகமது அலியார், மாவட்ட தலைவர்கள் பாலசுப்பிரமணியம், சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை