உள்ளூர் செய்திகள்

காங்., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்; உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் மீது செருப்பு வீச முயன்ற சம்பவத்தை கண்டித்தும், கேரளாவில் 24 வயது இளைஞர் பலியான சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்., சார்பில் நாகல் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இளைஞர் காங்., தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன், இளைஞர் காங்., தமிழக பொறுப்பாளர் ஜின்சாத், மாநில இளைஞர் காங்., செயலாளர் சரவணன் பேசினர். சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவர் அக்னி ராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ