மேலும் செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
22-Jan-2025
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதிரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. பிப்.15ல் முதல் கால வேள்வி மாலை துவங்கியது. 2ம் கால வேள்வி நேற்று அதிகாலை 5:30 மணிக்கு துவங்கி நடந்தது. வேள்வியில் வைக்கப்பட்ட புனித நீர் நிரம்பிய கும்ப கலசங்கள் எடுத்துவரப்பட்டு மூலவர் சன்னதி விமானத்தில் உள்ள கலசத்திற்கு ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இதை அமிர்தலிங்கம் குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் நடத்தி வைத்தனர். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து பங்கேற்றார். கொடைக்கானல்: கொடைக்கானல் செண்பகனுார் பத்ர காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி மூன்று நாட்கள் யாகசாலை ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து தீபாராதனை உடன் கடம் புறப்பட அம்மன் கலசம், பத்ரகாளியம்மன், மகா கணபதி, சுப்ரமணியர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கல்சங்களுக்கு புனித நீர் ஊற்ற கும்பாபிேஷகம் நடந்தது.
22-Jan-2025