நிலம் கையகப்படுத்த கலந்தாய்வு கூட்டம்
பழநி:பழநி முருகன் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த பெருந்திட்ட வரைவு திட்டத்துக்காக கோயிலை சுற்றி 58 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நில இழப்பீடு தொகையை வெளிப்படையாக அறிவிக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பான நில ஆவணங்கள், உரிமையாளர் விபரங்கள், ஆலோசனை, ஆட்சேபனை பெறுவதற்காக திண்டுக்கல் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி தலைமையில் பழநியில் இக்கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கூறுகையில் 'நில ஆவணங்களில் பட்டா மாறுதல் செய்யப்படாத நிலை உள்ளது. சிலருக்கு கூட்டு பட்டா உள்ளது. அவற்றை மாற்ற முடியவில்லை. கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீடு தொகை வழங்குவது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கவில்லை '' என்றனர். நிலம் குறித்த தகவல்களை அரசுக்கு அனுப்பி அரசு வழங்கும் இழப்பீடு தொகை குறித்து தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.