உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன் அறிவிப்பில்லாமல் எடுத்து சென்ற மீட்டரை பொருத்த மின்வாரியத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

முன் அறிவிப்பில்லாமல் எடுத்து சென்ற மீட்டரை பொருத்த மின்வாரியத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முன் அறிவிப்பில்லாமல் வீட்டிலிருந்து எடுத்து சென்ற மின்மீட்டர் பெட்டியை அதே இடத்தில் பொருத்துவதோடு கூடுதல் கட்டணமும் வசூலிக்க கூடாது என மின்வாரியத்திற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அற்புதராஜ்45. இவரது வீட்டிலிருந்த மின்மீட்டர் பெட்டியை முன்னறிவிப்பில்லாமல் 2024 மார்ச்சில் திண்டுக்கல் மின்வாரிய அதிகாரிகள் எடுத்து சென்று கூடுதலாக மின் கட்டணத்தை வசூலித்தனர். இதை தொடர்ந்து அற்புதராஜ், திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதன் வழக்கறிஞராக மதிவாணன் ஆஜரானர். விசாரித்த ஆணைய தலைவர் சித்ரா, முன்னறிவிப்பில்லாமல் எடுத்த சென்ற மின்மீட்டர் பெட்டியை 4 வாரத்திற்குள் அற்புதராஜ் வீட்டில் பொருத்த வேண்டும். இதற்காக கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது. இதை நிறைவேற்றாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என மின்வாரியத்திற்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ