உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

பழநி:பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏலம் மையத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது.பழநி கூட்டுறவு சங்க கொப்பரை தேங்காய் ஏல மையத்தில் பிரதி வாரம் புதன் கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும். முத்துார், வெள்ளகோயில், பழநி, காங்கேயம், பொள்ளாச்சி சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்கின்றனர்.எண்ணை ஆலை பிரதிநிதிகள், ஏலம் எடுக்கும் நபர்கள் அதற்கான படிவத்தில் கொப்பரை தேங்காய்களின் விலை நிலவரங்களை சமர்ப்பிக்கின்றனர். கட்டுப்படி ஆகும் ஏல தொகைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.விலை கட்டுப்படியாகாத நிலையில் இருப்பு வைத்து அடுத்தஏலத்தில் பங்கு பெறுகின்றனர்.தற்போது நடந்த ஏலத்தில் முதல் தர கொப்பரை தேங்காய் ரூ.247.56 க்கு விற்பனை ஆனது. குறைந்தபட்சமாக ரூ.198க்கு விற்பனையானது. ஏழு டன் கொப்பரை தேங்காய் 52 பகுதிகளாக ஏலம் விடப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை