மாநகராட்சி ஊழியர்கள் அன்னதானம்
திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்களே சமைத்து அன்னதானம் வழங்கினர்.பழநி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் மாநகராட்சி பின்புறம் வாசல் வழியாக பழநிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேயர் இளமதி தொடங்கி வைத்தார்.