உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் கல்லுாரியில் கலந்தாய்வு-

நத்தம் கல்லுாரியில் கலந்தாய்வு-

நத்தம்: நத்தம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முதல்வர் ராஜாராம் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, நாட்டு நலப்பணித் திட்ட, பாதுகாப்புப்படை வீரர்கள், அந்தமான் நிக்கோபார் பகுதிகளை சேர்ந்த தமிழ் மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் 17 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். தரவரிசை, அரசின் விதிமுறைகளின் படி 11 மாணவர்கள் பி.காம், பி.பி.ஏ., , பி. ஏ., வரலாறு, பி.எஸ்.சி., கணினி அறிவியல், டேட்டா சைஸ் போன்ற பாடப்பிரிவுகளில் சேர தேர்வாகி உள்ளனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜூன் 4-) அனைத்துப் பாடப்பிரிவினருக்கும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ