உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கடன் பிரச்னையால் தம்பதி தற்கொலை

கடன் பிரச்னையால் தம்பதி தற்கொலை

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மகன் படிப்பு செலவிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத மன உளைச்சலில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.திண்டுக்கல் மங்களபுரம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகேந்திரன் 57. மனைவி தனலட்சுமி 55. இவர்களது ஒரே மகன் கதிரேஸ்வரன் 25. பட்டப்பட்டிப்பு முடித்துள்ள இவர் திருச்சி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மகன் படிப்பிற்காக நாகேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன் வங்கி, தனிநபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கினார். அதனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. இதனால் கணவன்,மனைவி மன உளைச்சலில் இருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு உணவில் விஷத்தை கலந்து சாப்பிட்டு வீட்டிற்குள் மயங்கி கிடந்தனர். அக்கம்பக்கத்தினர்மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் இறந்தனர். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ