கிரசன்ட் பள்ளி ஆண்டு விழா
நெய்க்காரப்பட்டி: பழநி நெய்க்காரப்பட்டியில் கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி நிர்வாக அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி முதல்வர் ரவிசங்கர் பேசினார். அறங்காவலர் சித்ரா, தாளாளர் ராஜாகவுதம், அறங்காவலர் குழு உறுப்பினர் ஸ்நேகிதா, முதல்வர் சாந்தி கலந்து கொண்டனர்.