பழநியில் பக்தர்கள் கூட்டம்
பழநி: பழநி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது. வெளிமாநில, வெளியூர், உள்ளூர், பாதயாத்திரை பக்தர்கள் வந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் காத்திருந்தனர். பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த நிலையிலும் பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வந்தனர். கோயிலில் பொது, கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரம் ஆனது. திரு ஆவினன்குடி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.