மேலும் செய்திகள்
கிரிக்கெட் லீக் போட்டிகள் : சச்சின் அணி வெற்றி
17-Mar-2025
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் , சென்னை சூப்பர் கிங்ஸ் இணைந்து நடத்திய கல்லுாரிகள் இடையேயான மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டியில் ஆத்துார் அரசு கல்லுாரி வென்றது.என்.பி.ஆர்., ஆர்.வி.எஸ்., கல்லுாரி மைதானங்களில் நடந்த லீக் போட்டியில்திண்டுக்கல் யுனிவர்சிட்டி பொறியியல் கல்லுாரி அணி முதலில் பேட்டிங் செய்து 19.4 ஓவர்களில் 82 க்கு ஆல்அவுட் ஆனது. சிவப்பிரகாஷ் 4, பிரதீப் 3 விக்கெட். சேசிங் செய்த ஆத்துார் அரசு கல்லுாரி அணி 15 ஓவர்களில் 88/4 எடுத்து வென்றது.இஸ்ரோ 29(நாட்அவுட்). எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 94/9. விஜய் 3 விக்கெட். சேசிங் செய்த காந்திகிராம பல்கலை., 15.1 ஓவர்களில் 95/4 எடுத்து வென்றது. திண்டுக்கல் பார்வதீஸ் கலை, அறிவியல் கல்லுாரி அணி 15.2 ஓவர்களில் 39 ஆல்அவுட் ஆனது. நவீத்குமார் 5 விக்கெட். சேசிங் செய்த ஜி.டி.என்., கலை, அறிவியல் கல்லுாரி அணி 3.5 ஓவர்களில் 40/1 எடுத்து வென்றது.சேசிங் செய்த ஜி.டி.என்., குழும அணி 2.3 ஓவர்களில் 46 எடுத்து வென்றது. நவீன்குமார் 33(நாட்அவுட்). முதல் சுற்று லீக் போட்டிகளில் ஜி.டி.என்., குழுமம் ஆர்டஸ் கல்லுாரி, என்.பி.ஆர்., பொறியியல், காந்திகிராம பல்கலை., பி.எஸ்.என்.ஏ., ஆத்துார் அரசு கல்லுாரி, ஆர்.வி.எஸ்., பொறியியல், எஸ்.எஸ்.எம்., ஆகிய கல்லுாரி அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.
17-Mar-2025