உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாட்ஸ் ஆப் மூலம் வர்த்தகம் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வாட்ஸ் ஆப் மூலம் வர்த்தகம் எனக்கூறி வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திண்டுக்கல்:'வாட்ஸ்-அப்' மூலம் வர்த்தகம் செய்யலாம் எனக்கூறி திண்டுக்கல் வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த வியாபாரி சுலைமான்சேட் 52. சில மாதங்களுக்கு முன் இவரின் அலைபேசி 'வாட்ஸ்- ஆப்' எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது. அந்த தகவலை சுலைமான்சேட் படித்த சில நிமிடங்களில் 'வாட்ஸ் ஆப்' மூலம் அவரை சிலர் தொடர்புக்கொண்டு பேசி உள்ளனர். அப்போது நாங்கள் கூறும் முறைப்படி 'வாட்ஸ்- ஆப்' குழுவில் இணைந்து ஆன்லைன் வர்த்தகம் செய்தால் முதலீடு தொகை பல மடங்கு அதிகரிக்கும் எனவும் ஆசைவார்த்தை கூறினர். அதை நம்பி சுலைமான் சேட் அவர்கள் கூறியபடி சில வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக ரூ.8 லட்சத்தை அனுப்பி முதலீடு செய்துள்ளார். தொடக்கத்தில் அவருக்கு முதலீடு செய்த தொகைக்கு பணம் கிடைத்துள்ளது. அதன் பிறகு பணம் அவருக்கு வருவது நின்றது. சந்தேக மடைந்த அவர் 'வாட்ஸ்- ஆப்' குழுவில் இருப்பவர்களை தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அந்தக்குழு முடக்கப்பட்டதால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. பிறகு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை