நாய் தொல்லையால் தினமும் அச்சம்
பழநி:நாய் தொல்லையால் பழநி 15 வது வார்டு மக்கள் தினமும் அச்சத்துடன் பயணிக்கும் நிலையில் உள்ளனர்.லட்சுமிபுரம், வள்ளலார் தெரு, ஓம் சக்தி கோயில் தெரு, ராஜா நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகள் சேதம் அடைந்து வருகிறது. ராஜா நகர் பூங்கா பகுதியில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதோடு இங்குள்ள பூங்காவை பயன்படுத்தாத நிலை ஏற்படுவதால் பூங்கா அமைக்க வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். விபத்தில் சிக்கும் அபாயம்
முரளி, வியாபாரி, வள்ளலார் தெரு :ஆதிபராசக்தி கோயில் அருகே நாய்கள் கூட்டமாக உள்ளன . தெருவில் நடந்து செல்லும் நபர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது . இரவு நேரத்தில் நடந்து சென்றால் நாய்கள் துரத்துகிறது . கடித்து விடும் என்பதால் டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தேவை போலீஸ் ரோந்து பணி
ரியாஜ், டெய்லர், லட்சுமிபுரம் : வெளி நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இங்கு போலீசார் ரோந்து பணியையும் தீவிர படுத்த வேண்டும். ராஜா நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தொட்டி பணியை தீவிரப்படுத்தி விரைவில் முடிக்க வேண்டும்.இதனால் லட்சுமிபுரம் பகுதியில் தண்ணீர் தடங்கல் இன்றி வரும். பணியின்போதே சாலை சீரமைப்பு
கந்தசாமி, கவுன்சிலர் , ( நகராட்சி துணைத்தலைவர் , மார்க்சிஸ்ட் ) : நகராட்சி பகுதி முழுவதும் நாய் தொல்லை அதிகம் உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நாய்களுக்கு உணவு அளித்து வரும் சிலர் அந்த நாய்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெறும் போது சாலைகளும் சரி செய்யப்படுகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டி பணி முடிவுற்றவுடன் தண்ணீர் சீராக வரும் என்றார்