உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டு யானை கூட்டத்தால் விளை பொருட்கள் சேதம்

காட்டு யானை கூட்டத்தால் விளை பொருட்கள் சேதம்

ஆயக்குடி:திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடி நந்தவனம் பகுதியில் விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை கூட்டத்தால் விளை பொருட்கள் சேதமடைந்தன.பழநி ஆயக்குடி நந்தவனம் பகுதியில் ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்கு அருகே விளை நிலங்கள் உள்ளன. நெல், தென்னை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களாக இப்பகுதியில் காட்டு யானை கூட்டம் நடமாட்டம் உள்ளது.நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள சுரேஷ், சுப்புராஜ், சடையப்பன் தோட்டத்திற்குள் புகுந்த யானை கூட்டம் 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை சேதப்படுத்தின. நெற்பயிர்களையும் சேதப்படுத்தி அழித்தன.இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானைகளை விரட்டி வருகின்றனர். இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ