உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடர் மழையால் நிரம்பும் அணைகள்

தொடர் மழையால் நிரம்பும் அணைகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கொடைக்கானல், பழநி, ஒட்டன்சத்திரம் என மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையின் காரணமாக பழநியில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது. 66 அடி உயரமுள்ள வரதமாநதி அணை நிரம்பியதால் அணைக்கு வரும் நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. குதிரையாறு அணையும் நிரம்பி வழிகிறது. பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணை பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.அதே நேரத்தில் அணைகளுக்கு வரும் நீரின் அளவு சராசரியாக 100 கன அடிக்கு மேல் உள்ளதால் அணைகள் மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது.அதேபோல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையால் ஒரே நாளில் 160.30மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

இதன் மழையளவு விபரம் (மி.மீ.,ல்) திண்டுக்கல் -35 நத்தம் - 10

நிலக்கோட்டை -25.20 பிரையன்ட் பூங்கா -26.50 ரோஸ்கார்டன் -22 சத்திரபட்டி -29.80


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ