மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / செப்.25
25-Sep-2025
திண்டுக்கல்; திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில் தசரா விழாவில் மகிஷாசூர வதம் நேற்று நடந்தது. நவராத்திரி விழாவையொட்டி பத்ரகாளியம்மன் கோயலில் 10 நாள் தசரா திருவிழா நடந்தது. விழாவின் ஒவ்வொரு நாளிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. தசரா திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இரவு மகிஷாசூர வதம் நடந்தது. இதில் சிம்ம வாகனத்தில் அம்மன் மகிஷாசூரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, கண்ணை கவரும் 'வான வேடிக்கை' நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தீர்த்தம் அழைத்தல்,10:00 மணிக்கு கணபதி ஹோமம், சூழினி துர்க்கா ஹோமம், காலை 11:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், மாலை 5:30 மணிக்கு மஹா தீபாராதனை, 6:00 மணிக்கு கேரளா செண்டை மேளத்துடன் அம்மன் நான்கு ரத வீதி வழியாக அம்மன் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு மேல் அன்னதானம் நடந்தது.
25-Sep-2025