உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டெண்டர் விட்டு 18 மாதமாகியும் கட்டப்படாத மேல்நிலை தொட்டி நடவடிக்கை எடுக்க தீர்மானம்

டெண்டர் விட்டு 18 மாதமாகியும் கட்டப்படாத மேல்நிலை தொட்டி நடவடிக்கை எடுக்க தீர்மானம்

ஒட்டன்சத்திரம்: டெண்டர் விட்டு 18 மாதங்களாகியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை கட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வெரியப்பூர் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வெரியப்பூர் ஊராட்சி கூட்டம் ஊராட்சித் தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. உறுப்பினர்கள் கந்தசாமி, சேனாதிபதி, தண்டபாணி முன்னிலை வகித்தனர்.ஊராட்சியில் குடிநீர் வினியோகம் செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 9 மேல்நிலை தொட்டிகள் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டது. காளிபாளையத்தில் ஒரே தொட்டி மட்டும் அமைத்துள்ளனர். மூனுார், நாகப்பன்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சேதமடைந்துள்ளதால் சுத்தம் செய்ய பணியாளர்கள் அஞ்சுகிறார்கள். டெண்டர் விடப்பட்டு 18 மாதங்கள் ஆகியும் மேல்நிலை தொட்டியை கட்டாமல் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ,தொட்டிகள் அமைக்கும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர் பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை