உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பித்தளைப்பட்டியில் தீபத்திருவிழா

பித்தளைப்பட்டியில் தீபத்திருவிழா

சின்னாளபட்டி: பித்தளைப்பட்டியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காளியம்மன் கோயிலில் பத்தாயிரத்தி ஒரு தீபமேற்றும் விழா நேற்று நடந்தது.இதையொட்டி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் ,சிறப்பு மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது .பின்னர் கிராம மக்கள் சார்பில் தீபம் ஏற்றுதல் நடந்தது. சிறுவர் முதல் முதியோர் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று தீபம் ஏற்றனர். காளியம்மன் கோயில் முன்புறம் உள்ள கிராம வளாகத்தை தீபங்களால் அலங்கரித்தனர். வேல், சூலம், நட்சத்திரம் உட்பட பல்வேறு வடிவங்களிலும் தீப விளக்குகளை அமைத்தனர். சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை