உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  திண்டுக்கல் கோயில்களில் தீபத்திருவிழா வழிபாடு

 திண்டுக்கல் கோயில்களில் தீபத்திருவிழா வழிபாடு

திண்டுக்கல்:கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், சொக்கப்பனை கொளுத்துதல், அகல்விளக்கு ஏற்றுதல் என கொண்டாடப்பட்டது. கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் சிவன், முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் வழிபாடுகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் பரணி தீபம் ஏற்ற நேற்று காலை 6 மணியளவில் ஞானாம்பினக-காளகத்தீசுவரர், அபிராமி அம்மன் ,-பத்மகிரீசுவரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. 9:30 மணிக்கு வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலை 5 :00 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று கோயில் மகா மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது.இரவு கோயிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெற்றது. ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பாக கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் மேள, தாளங்கள் முழங்க நடந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் இல்லங்களில் ஏராளமான அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால் நகரின் வீதிகள் அகல் விளக்கின் தீப ஒளியில் ஜொலித்தது பெரும்பாலானோர் பட்டசாசுகள் வெடித்து தீபத்திருநாளை கொண்டாடினர். திண்டுக்கல் நாகல்நகர் ரயிலடி சித்திவிநாயகர் கோயிலில் வள்ளி ,தெய்வானை ,முருகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. மேட்டுராசாக்கப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், என்.ஜி.ஓ., காலனி தண்டாயுதபாணி சுவாமி, சுந்தகோட்டம் முருகன் உட்பட நகரின் முக்கிய கோயில்களில் திருக்கார்த்திகை தீப சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சின்னாளபட்டி : சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. கணபதி ஹோமத்துடன் துவங்கி விசேஷ யாகசாலை பூஜைகள் நடந்தது. மூலவருக்கு வெள்ளிக்காப்பு அலங்காரத்துடன் மகா அபிஷேகம் நடந்தது. உற்ஸவர் வள்ளி, தெய்வானை, சிவசுப்பிரமணியருக்கு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், தருமத்துப்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ