மேலும் செய்திகள்
போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
04-Jun-2025
நிலக்கோட்டை:தமிழக வெற்றிக்கழக (த.வெ.க.,) தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க., குறித்து அவதூறாக போஸ்டர் ஒட்டிய அக்கட்சி நிர்வாகி 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.த.வெ.க., தலைவர் விஜய் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல இடங்களில் விஜயை வாழ்த்தி பிளக்ஸ், போஸ்டர்களை அக்கட்சியினர் ஒட்டி வருகின்றனர். தி.மு.க., கட்சியின் கருப்பு, சிவப்பு நிறத்தில் 'திருடர்கள் முன்னேற்ற கழகத்தை' அரசியலில் இருந்து அகற்ற வந்த அண்ணா என குறிப்பிட்டு த.வெ.க., தலைவர் விஜய், பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதுகுறித்து தி.மு.க.,வினர் த.வெ.க., நிர்வாகிகள் மீது நிலக்கோட்டை, அம்மையநாயக்கனுார், வத்தலக்குண்டு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தனர்.இதையடுத்து நிலக்கோட்டை த.வெ.க., நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ராமர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ஜெயச்சந்திரனை அம்மையநாயக்கனுார் போலீசார் கைது செய்தனர்.
04-Jun-2025