ஆர்ப்பாட்டம்
வடமதுரை: தமிழக அரசின் வெற்றி பயணத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வசதியை விரிவுப்படுத்தாமல் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், அய்யலுாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் பாக்கியலட்சுமி, செயலாளர் சரவணக்குமார் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.