குண்டாம்பட்டி ரோட்டிற்கு விடிவு
வடமதுரை: எரியோடு நகருக்கு பை பாஸ் ரோடு போல் உதவிடும் 2.40 கி.மீ., துார குண்டாம்பட்டி துாங்கனம்பட்டி ரோடு தினமலர் செய்தி எதிரொலியாக வலுவானதாக மாற்றப்படுகிறது.திண்டுக்கல் குஜிலியம்பாறை வழி கரூர் நெடுஞ்சாலையில் உள்ள எரியோடு நகருக்குள் வரும் ரோடு குறுகலாக உள்ளது. ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் சேதமாகும் போது சீரமைப்பு பணி, அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், மறியல் போன்ற நேரத்தில் வாகனங்கள் குண்டாம்பட்டி, அச்சணம்பட்டி கிராமங்கள் வழியே திருப்பிவிடப்படுகிறது. கிராம ரோடுகள் வழியே வாகனங்கள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. ரோடை அகலமாக்க தினமலர் நாளிதழ் வலியுறுத்தி செய்தி வெளியானது. இதன் பலனாக தற்போது குண்டாம்பட்டியில் இருந்து எரியோடு அய்யலுார் ரோடு வரை 2.40 கி.மீ.,க்கு வலுவான ரோடாக மாற்றப்பட உள்ளது.