உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சில பணிகளில் தொய்வு துணை முதல்வர் உதயநிதி கருத்து

சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சில பணிகளில் தொய்வு துணை முதல்வர் உதயநிதி கருத்து

திண்டுக்கல் : ''திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஒரு சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இதை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம் ,'' என துணை முதல்வர் உதயநிதி கூறினார். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் அனைத்து துறைமூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பெரிய சாமி, சக்கரபாணி முன்னிலை வகித்தனர். அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், அரசு கூடுதல் செயலாளர் உமா, திண்டுக்கல் கலெக்டர் சரவணன்,எம்.பி.,க்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா கலந்து கொண்டனர். துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: அரசு சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறோம். திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக இருப்பது அதிகாரிகள், அரசு அலுவலர்கள் தான்.உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மனுக்கள் பெறுவதை மட்டும் வைத்துக்கொள்ளாமல் மக்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்யதிட நடவடிக்கைஎடுத்திட வேண்டும். ஒருவர் ஒரு மனு என்றில்லாமல் 3 மனு கொடுத்தாலும் அதை முடிந்தளவிற்கு சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார். நிருபர்களிடம் உதயநிதி கூறியதாவது: முதல்வர் உத்தரவின் பேரில் ஒவ் வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்படுகிறது.பல்வேறு திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுஇருந்தாலும் ஒருசில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இதனைமுதல்வருக்கு தெரிவித்துகண்காணிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !