உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 20 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு

20 டன் புகையிலை பொருட்கள் அழிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 20டன் தடை புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குழி தோண்டி அழித்தனர்.மாவட்டத்தில் தடை புகையிலை பயன்பாடை தடுக்க கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட முழுவதும் ஆய்வு செய்தனர். தினசரி கிலோக்கணக்கில் தடை புகையிலை பொருட்கள் சிக்கியது. ஒரு ஆண்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 20 டன் தடை புகையிலை பொருட்களை கோடவுனில் தேக்கி வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் கலைவாணி, அலுவலர்கள் செல்வம்,லாரன்ஸ்,மாநகராட்சி நகர்நல அலுவலர் பரிதாவாணி,சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பறிமுதல் புகையிலை பொருட்களை பழநி ரோடு முருகபவணம் குப்பை கிடங்கில் குழிதோண்டி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை