மேலும் செய்திகள்
பழநியில் திரண்ட பக்தர்கள்
16-Mar-2026
பழநி: பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நேற்று திரண்டனர். வார விடுமுறையையொட்டி பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வந்திருந்தனர். கரும்பு தொட்டில் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கோயிலுக்கு செல்ல ரோப்காரில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது, கட்டண தரிசன வரிசையில் மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் வழியாக உள்ள படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வெயில் அதிகமாக இருந்ததால் கிரிவீதியில் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
16-Mar-2026