உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொடர் மழை, பனிப்பொழிவு பழநியில் பக்தர்கள் அவதி

தொடர் மழை, பனிப்பொழிவு பழநியில் பக்தர்கள் அவதி

திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் பிப்., 11 தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டுள்ளனர். பொங்கலை முன்னிட்டு தொடர்முறையால் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து வருகின்றனர்.இந்நிலையில் இரண்டு நாட்களாக இம்மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்யும் மழை மற்றும் பனிப்பொழிவால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சூரிய வெளிச்சம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடனேயே காட்சியளிக்கிறது. நாள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையுள்ளது.இதனால் இரவு, அதிகாலை நடப்பதை வழக்கமாக கொண்டுள்ள பக்தர்கள் நேரத்தை மாற்றியுள்ளனர். காலை 10:00 மணிக்கு பிறகு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் போதிய தங்குமிடம் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை