உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் காத்திருந்த பக்தர்கள்

பழநியில் காத்திருந்த பக்தர்கள்

பழநி, : பழநி முருகன் கோயிலில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் காத்திருந்தனர். சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர். 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிரிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால், பேட்டரி கார், பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். தைப்பூசத்தில் பாதயாத்திரை பயணம், பங்குனி உத்திரத்தில் தீர்த்த காவடி முக்கியத்துவம் பெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு டிசம்பர் 2வது வாரத்தில் இருந்தே பக்தர்கள் குழுக்களாக பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூசம் நெருங்கும் நேரத்தில் பக்தர்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கும். திருச்சி, தஞ்சாவூர், அரியலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட வடக்கு பகுதி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலை வழியே அய்யலுார், வடமதுரை, எரியோடு, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் வழியே பாதயாத்திரையாக சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளையகவுண்டம்பட்டி பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட முருகன் சுவாமி தேருடன் கும்மி, குச்சியடி ஆட்டத்துடன் எரியோடு வழியே சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ