உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குடற்புழு நீக்க மாத்திரை

 குடற்புழு நீக்க மாத்திரை

வடமதுரை: வடமதுரை வட்டாரத்தில் பள்ளிகள், கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்களில் இருக்கும் மாணவர்கள், குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு 37,299 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நடந்தது. வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துவக்க விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் காந்திமதி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், சமுதாய செவிலியர் லதா, சந்திரசேகர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி