வேன் மோதி பலி
திண்டுக்கல்: தோமையார்புரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் அம்மாள் 40. வீட்டின் அருகே உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் பள்ளி வேன் பின்னால் வந்த போது நாகூர் அம்மாள் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது வேன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.