உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாரியில் டீசல் திருட்டு

லாரியில் டீசல் திருட்டு

வேடசந்தூர்: விருதுநகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் சக்திவேல் 50. இவர், சிவகாசியிலிருந்து கண்டெய்னர் லாரியில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு, ஓசூர் நோக்கி சென்றார். வேடசந்தூர் மினுக்கம்பட்டி அருகே, அதிகாலை 2:30க்கு லாரியை ரோட்டோரம் நிறுத்திவிட்டு தூங்கினார். மீண்டும் காலை எழுந்து வண்டியை ஸ்டார்ட் செய்தபோது இன்ஜின் ஆப் ஆனது. பிறகு டிரைவர் டீசல் டேங்கை பார்த்த போது அதில் இருந்த 80 லிட்டர் டீசல் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 ஆயிரத்து 500 ஆகும். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி