போக்சோவில் திண்டுக்கல் உதவி பேராசிரியர் கைது
சாணார்பட்டி: திண்டுக்கல்லில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கல்லுாரி உதவிப்பேராசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் சரண் 31. தனியார் கல்லுாரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 13 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த இன்ஸ்பெக்டர் சத்யபிரபா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சரணை நேற்று கைது செய்தார். கைது செய்யப்பட்ட சரணுக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆகிறது.