மழையால் குளிர்ந்த திண்டுக்கல்
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரைமணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான நிலை நிலவியது. திண்டுக்கல்லில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஒரு வாரமாக மதியத்திற்கு மேல் மழை பெய்கிறது. அதன்படி, நேற்று காலையில் வெயில் அடித்தாலும் மதியம் 12:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 1:00 மணிக்கு லேசான துாரலுடன் தொடங்கி அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. லெக்டர் அலுவலகம், ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் பெய்தது. தாடிகொம்பு ரோடு, ஆர்.எம்.காலனி, திருச்சி ரோடு நேருஜி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பகல் நேரத்தில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.